சென்னையில் 36,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் : மின்சார வாரியம்

இரவு முழுவதும் பெய்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் 36,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
 
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பு கருதி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் 36,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பூர், வியாசர்பாடி, மேற்கு மாம்பலம், தி.நகர், கெ.கெ.நகர் மற்றும் வேளச்சேரியின் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளை சூழ்ந்திருக்கும் மழைநீர் குறைந்தபிறகு மின் விநியோகம் சீராகும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
 
image
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 4,000க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 8,000க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் களப் பணியாற்றிக்கொண்டும், தயார் நிலையில் உள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post