
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். வடகிழக்கு பருவமழை அதீதிவிர மழையாக தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது, துரித நடவடிக்கை மேற்கொள்வது, முகாம்கள் தயார் நிலையில் வைப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு
இதனைத்தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு செய்கிறார். டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கடலூர் செல்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News