சென்னையில் மதியம் 1 மணி வரை கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி) கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
image
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மதியம் ஒரு மணிவரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post