பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு-The girl child died tragically

பெண்ணாடம் அருகே சூடாக இருந்த சாம்பார் வாளியில் தவறி விழுந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் - தனலட்சுமி தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி தனது வயலில் வேலை செய்யும் வேலை ஆட்களுக்கு தனது வீட்டில் மதிய உணவு தயார் செய்யச் சொல்லியுள்ளார் மணிகண்டன்.

image

இதையடுத்து தனலட்சுமி மதிய உணவிற்காக சாதம் மற்றும் சாம்பார் தயார் செய்து வீட்டில் வைத்துள்ளார். அப்போது தனது குழந்தைக்கு பால் கொடுக்க சமையலறைக்குள் சென்ற அவரை பின்தொடர்ந்து சென்ற ஒன்றரை வயது பெண் குழந்தை கிருபா ஸ்ரீ நிலைதடுமாறி சூடான சாம்பார் வாளியில் விழுந்துள்ளார்.

உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலுள்ள விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கிருபா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

image

இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை சாம்பாரில் விழுந்து பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

The baby girl who fell into the hot sambar bucket near the girl died tragically without any treatment effect.

The Manikandan-Thanalakshmi couple from Thazhanallur village next to Pennadam in Cuddalore district have two children as a son and a daughter. In this situation, on the 26th, Manikandan told the workers working in his field to prepare lunch at his house.

Following this, Dhanalakshmi prepares rice and sambar for lunch and keeps it at home. Kiruba Sri, a one-and-a-half-year-old girl who followed him into the kitchen to give milk to her baby, stumbled and fell into a bucket of hot sambar.

The baby was immediately rescued and admitted to the nearby Vriddhachalam Government Hospital. Later, they were rushed to Zimmer Hospital in Pondicherry for further treatment. Following this, Kiruba Sri died tragically last night without receiving any treatment while being treated there.

The police have registered a case against the girl and are investigating. The incident in which a one and a half year old child fell into a sambar and died has caused tragedy in the village.

Post a Comment

Previous Post Next Post