'பேனர்களை முழுமையாக தடுக்க விதிகள் தேவை' -'Rules needed to stop banners completely'

பேனர் வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடிக்கம்பம், பேனர்களை வைத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய இழப்பீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இழப்பீடு தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, திமுக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில், 'பேனர்கள் வைத்தால் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கூறியுள்ளார்.

தம்மையோ, அமைச்சர்களையோ வரவேற்று பேனர்களை வைக்க வேண்டாம் என அவர் கண்டிப்புடன் கூறியுள்ளார்' என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேனர் வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

The incident where the boy was electrocuted while hoisting the flagpole and banners welcoming Minister Ponmudi caused a stir. A case was filed in the Chennai High Court seeking appropriate compensation in this regard.

When the case came up for hearing, the Chennai High Court directed the Tamil Nadu government and the DMK to respond to the compensation case. During the trial, Chief Minister Stalin had already stated on behalf of the Tamil Nadu government that he would not participate in the event if banners were put up.

He has strongly said that he should not put up banners welcoming himself or the ministers. Following this, the Chennai High Court has ordered the Tamil Nadu government to lay down rules to prevent the placing of the banner completely.

Post a Comment

Previous Post Next Post