
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி போட்ட இரண்டு மணி நேரத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் நேற்று நான்காவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காந்திநகர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு கொரோனோ தடுப்பூசி முகாமில் ராஜா (53) என்ற விவசாய கூலித் தொழிலாளி முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டுக்கு வந்த இரண்டு மணி நேரத்தில் நெஞ்சுவலிப்பதாகவும் மயக்கம் வருவதாக கூறிய அவர், கிழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை, அவசரம் அவசரமாக ஆத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News