
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் பகலில் வெப்பம் காணப்பட்டாலும் கடந்த சில நாட்களாக இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கிண்டி, வடபழனி, அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தென்காசி மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தென்காசி, செங்கோட்டை, வடகரை, பண்மொழி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Widespread rains lashed various parts of Tamil Nadu, including Chennai.
Although it is hot in Chennai during the day, it has been raining extensively at night for the last few days. In that manner, thundershowers fell in various parts of Chennai including Kindi, Vadapalani and Annasalai. It also rained extensively in the suburbs of Chennai.
Heavy rains lashed the Tenkasi district at the foothills of the Western Ghats for more than an hour. Farmers said the rains in areas including Tenkasi, Red Fort, Vadakara and Panmozhi would be beneficial for agriculture.
In Kanyakumari district, heavy rains lashed various places including Kaliyakkavilai, Kuzhithurai, Marthandam and Thakkala. Due to the continuous heavy rains, the water supply to Pechipparai, Perunchani and Sithara dams has increased.
Tags:
weather report