கருணாநிதி நினைவிட கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிகள் கோரி விண்ணப்பம் -Application for permission

சென்னை மெரினாவில் அமையவுள்ள கருணாநிதி நினைவிட கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிகள் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது.

2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ 39 கோடி செலவில் மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 24 இல் முதலமைச்சர் ஸ்டாலின்  அறிவித்தார். அதன்பின்னர் கருணாநிதி நினைவிடப்பணிகள் குறித்து கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனையும் மேற்கொண்டிருந்தார். இந்த சூழலில் பொதுப்பணித்துறையினர் தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

தமிழ்நாடு அரசின் ஒப்புதலையடுத்து கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்திடம் கட்டுமான அனுமதிக்கு திட்ட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதிகள் கிடைத்த பிறகு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கும்  என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Permission has been applied for the construction of the Karunanidhi Memorial at the Chennai Marina.

On August 24, Chief Minister Stalin announced that the Karunanidhi Memorial would be set up on the 2.21-acre Marina at a cost of Rs 39 crore. Thereafter, the Chief Minister held a consultation on September 17 on the Karunanidhi memorial. In this context, the Government of Tamil Nadu has approved the detailed project report prepared by the Public Works Department.

With the approval of the Government of Tamil Nadu, a project permit has been sought from the Coastal Regulatory Zone for a construction permit, and permission has also been sought from the Chennai Metropolitan Development Authority. The government has said that the contract will be sought and the work will start after obtaining the necessary permits.


Post a Comment

Previous Post Next Post