
அதிமுக ஆட்சியின்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக, சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட்டும் இருந்ததாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கி தொண்டர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்... கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவினர் 505 பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்.
இந்த ஐந்து மாதங்களில் அவர்கள் உறுதியாக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர்க்கான தாலிக்கு தங்கம் மற்றும் பெண்களுக்கான ஸ்கூட்டி திட்டங்கள் தற்போது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் உள்ளது. திமுகவினர் கொடுத்த வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, மகளிருக்கான ஆயிரம் ரூபாய் பணம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, போன்ற எந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
மேலும் அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தார்கள். தமிழகம் அமைதிப் பூங்காவாக, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டும் இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் நாளிதழ்களை படிக்கும் போதே கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது தெரிகிறது. ரயில்வே நிலையங்களில் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படி மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திமுக அரசுக்கு இது பற்றி எந்தவிதமான கவலையும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News