மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இன்று (அக்.02) ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட மாட்டாது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மன்னார் வளைகுடாவில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ளுமாறும் மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
The Fisheries Department has announced that Rameswaram fishermen will not be issued permits today (Oct. 02) as the Meteorological Department has warned of sea rage in the Gulf of Mannar.
Fishermen are fishing in more than 700 trawlers from the Rameswaram fishing port in Ramanathapuram district.
The Meteorological Department has warned that winds of 50 to 60 kmph are expected in the Gulf of Mannar. Fisheries officials have therefore advised fishermen to park their boats in a safe place.
Tags:
News