திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வீரபாண்டி ஆ.ராஜா காலமானார்.
திமுகவின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜா. இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே உடல்நலக்குறைவால் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியன் உயிரிழந்த நிலையில் தற்போது இளைய மகன் ராஜாவும் உயிரிழந்திருப்பது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
DMK Election Working Committee Secretary and former MLA Veerapandi A. Raja has passed away.
Veerapandi Raja is the youngest son of former DMK minister Veerapandi Arumugam. On the eve of his birthday, he returned home wearing an evening gown to the statue of his father Veerapandi Arumugam. Then he suddenly fainted. He was later recovered and taken to a private hospital.
But relatives say doctors say he is already dead. The party is saddened by the death of Chezhiyan, the eldest son of Veerapandi Arumugam, who is already ill and the youngest son, Raja.
Tags:
News