தென்காசி: ஊராட்சி மன்றத் தலைவியின் வீடு மற்றும் வாகனத்தின் மீது கல்வீச்சு

தென்காசி மாவட்டத்தில் இளம் ஊராட்சி மன்றத் தலைவி ஒருவரின் வீடு மற்றும் வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கல் எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தெற்குமேடு ஊராட்சி மன்றத் தலைவியாக அனு என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதே ஊராட்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தெற்குமேடு ஊராட்சி மன்றத் தலைவி அனு வாக்களித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

image

அப்போது அவரது வீடு மற்றும் காரின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முருகையாவின் ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post