கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செம்பனார்கோவில் பகுதியிலுள்ள கேட்டரிங் நிறுவனத்தில், அரவிந்தன் என்பவர் வேலைசெய்து வந்துள்ளார். இவர் கடந்த 21ஆம் தேதி காணாமல் போன நிலையில், கேட்டரிங் நிறுவனத்தின் அலுவலக மாடியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகே விஷ பாட்டில்கள் கிடந்துள்ளது. இந்நிலையில் அரவிந்தனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

image

கேட்டரிங் நிறுவனத்தின் அலுவலக உதவியாளர் அன்பழகனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து 12 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாதா சாகேப் பால்கே விருதை பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன் - ரஜினிகாந்த் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post