ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்யுங்கள் - தலைமைச் செயலாளர் இறையன்பு

தீபாவளி இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

அனைத்துத்துறையின் அரசு செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், துறை சார்ந்த அலுவலக கூட்டங்களில் இனிப்பு வழங்கினால் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்ய வேண்டும்.

Sweets - Tamilnadu Co-operative Milk Producers' Federation Limited (TCMPF)

ஆவின் நிறுவனத்தில், தினமும் சராசரியாக 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும், உள்ளூர் விற்பனை போக, 27 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலாக விற்கப்படுகிறது என்றும், மீதமுள்ள பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாகு, ஐஸ்கிரீம் முதலான பால் உப பொருட்களாக தயாரிக்கப்பட்டு, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வழியே விற்கப்படுவதாகவும் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆண்டுதோறும் தீபாவளிக்காக சிறப்பு இனிப்பு வகைகளை, ஆவின் விற்பனை செய்வதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு, இம்மாதம் 11ம் தேதி முதல் புதிய இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றுன், காஜுகத்லி கால் கிலோ 225 ரூபாய்க்கும், நட்டி மில்க் கேக் கால் கிலோ 210 ரூபாய்க்கும், மோத்தி பாக் கால் கிலோ 170 ரூபாய், காஜு பிஸ்தா ரோல் கால் கிலோ 275 ரூபாய், காபி பிளேவர்டு மில்க் பர்பி கால் கிலோ, 210 ரூபாய் என மொத்தம் ஐந்து வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு, அரை கிலோ, 425 ரூபாய் என விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும், சுகாதாரமான முறையில், ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற நெய்யில் தயாரிக்கப்பட்டவையோடு, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய துறை சார்ந்த, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும் பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்து வழங்கவும், துறை சார்ந்த அலுவலக கூட்டங்களில் இனிப்பு வழங்குவதாக இருந்தால் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்க வேண்டும் எனவும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post