
ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்திற்கு எதிராக ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தில் நேற்று மாலை ஒப்பந்த தொழிலாளி ஏழுமலை என்பவர் பணியில் இருந்தபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு ஏழுமலையின் மனைவி மற்றும் உறவினர்கள் நிறுவனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவாக ஆலையில் பணியாற்றி வரும் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் நிறுவனத்தில் பணி பாதுகாப்பு, இறந்தவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணியை புறக்கணித்து நிறுவனத்திற்கு எதிராக நுழைவாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News