திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

”திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை” என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவில் சஷ்டி திருவிழா வரும் 4 ஆம் தேதி துவங்கி நவம்பர் 15 ஆம் தேதி நிறைவடைகிறது. விழாவின் உச்ச நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. 10 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த இரண்டு தினங்களுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

image

கொரோனா பரவல் சூழலால் கடந்தாண்டை போலவே, இந்த ஆண்டும் பக்தர்களின்றி சூரசம்ஹாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சி குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதேசமயம், நவம்பர் 4 முதல் 8 வரை மற்றும் 11 முதல் 15 வரை தினமும் காலை 5 முதல் இரவு 8 வரை பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி தரப்பட்டுள்ளது. அதேபோல, திருச்செந்தூர் விடுதிகளில் பேக்கேஜிங் முறையில் தங்குவதற்கும் அனுமதி இல்லை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post