
தென்காசி, நாமக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்தது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் காலை முதல் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலை வேளையில் சுமார் ஒருமணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் முதலைப்பட்டி, கொசவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

திருச்சி மாவட்டத்தில் பிற்பகலில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சின்ன ஆலம்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியதில் வீட்டின் கதவு மற்றும் மின்விசிறி சேதமானது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்கினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News