சேலம் நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய், சேய்: காப்பாற்றியவர்களை பாராட்டி முதல்வர் ட்வீட்

சேலம் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றியவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தாய் மற்றும் குழந்தை உட்பட நான்குபேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை அங்கிருந்த இளைஞர்கள் மிகவும் சிரமப்பட்டு மீட்டனர், அப்போது இரண்டு இளைஞர்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கினர். அதன்பின்னர் அவர்கள் நீந்தி சென்று பத்திரமாக மீண்டுவந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது! பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்” என தெரிவித்திருக்கிறார்.

இதனைப்படிக்க...வடகிழக்கு பருவமழை: பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post