“டீசல் விலை உயர்வால் போக்குவரத்துத் துறையும் சிரமத்தை சந்திக்கும்” -அமைச்சர் ராஜகண்ணப்பன்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் பொதுமக்களுக்கு சிரமம் இன்றி இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பணிமனையை ஆய்வு செய்தபின் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, "தமிழகத்தில் உள்ள 16 பேருந்து பணிமனைகளை மேம்படுத்த போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் வணிக வாளாகம் கட்டப்படும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு அவர்களின் பிரச்னையை பேச குழு அமைத்துள்ளோம். தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும்.

image

நாள்தோறும் 7.5 லட்சம் பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். டீசல் விலை உயர்வால் போக்குவரத்துத் துறையும் சிரமத்தை சந்திக்கும். தீபாவளி இனிப்பு வாங்குவதில் டெண்டர் முறைகேடு எதுவும் இல்லை. ஆவினில் வாங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம்

500 மின்சார பேருந்துகள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தீபாவளி சிறப்பு பேருந்துகள் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post