ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்திடம் நேரில் சென்று உடல் நலம் விசாரித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, வழக்கமான உடல் பரிசோதனைக்குதான் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தார். தலைச்சுற்றல் காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

image

இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், “ரஜினி சிறு தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் உடல்நலம் தேறி வருகிறார். சிகிச்சைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டது.

இதை மேலும் உறுதிசெய்யும் வகையில், ரஜினிகாந்த் ஆரோக்கியமான உடல்நலத்துடன் உள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன்னும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.


Tamil Nadu Chief Minister Stalin has visited Rajinikanth who is receiving treatment at the hospital and inquired about his health.


Earlier, Rajinikanth was admitted to Cauvery Hospital in Chennai on the 28th. Following this, his wife Lata Rajinikanth explained that Rajini was admitted to the hospital for a routine physical examination. It is said that Rajinikanth was admitted to the hospital due to dizziness.

A statement issued on behalf of the hospital said, "Rajini was admitted to the hospital due to dizziness. Rajinikanth is recovering well after being treated by medical professionals here. Actor Rajinikanth will return home in a few days after treatment. ”

To further confirm this, Tamil Nadu Medical Minister Ma Subramaniam had said that the doctors who treated Rajinikanth had told him that he was in good health. Meanwhile, the current Chief Minister Stalin has met him in person.

Post a Comment

Previous Post Next Post