
தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அநேக ,இடங்களில் ,இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் ,இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 10 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் ,இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், வரும் 10ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News