தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சொக்கலிங்கபுரம், புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. நாமக்கல் சுற்று வட்டாரத்தில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை நீடித்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அன்னவாசல், சித்தன்னவாசல், இலுப்பூர், கறம்பக்குடி, ஆலங்குடி உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
It rained in a few places in Tamil Nadu due to the southwest monsoon and atmospheric circulation.
Widespread rain with thunder and lightning at Aruppukottai, Sokkalingapuram and Puliyampatti in Virudhunagar district. Heavy rains lashed the Namakkal circuit for about an hour. As the impact of the storm increased over the past few days, people were delighted with the sudden downpour.
It rained for more than two hours in Erode district. It rained at various places in Pudukkottai district. Annavasal, Chitthannavasal, Iluppur, Karambakudy and Alangudi received showers. Farmers and the public rejoiced as the water bodies were flooded by the rains.
Meanwhile, most districts including Salem, Dharmapuri and Namakkal are likely to receive showers for the first five days today, the Met office said.
Tags:
weather report