
சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில்,கணக்கில் வராத 62 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் குறித்து சார்பதிவாளர் இந்துமதி மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல ;துறையினர் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே நில பட்டாவை பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட ஏர்வாடி வாணியம்பாடி கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி, மற்றும் உதவியாளர் உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News