
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு நடத்த உள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல், சீரமைத்தல், வாயில் மூடிகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த வகையில், மத்திய சென்னை மற்றும் வட சென்னைக்கு உட்பட்ட பகுதிகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓட்டேரி, பிரித்தானியா நகர் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்த உள்ளார். ஏற்கனவே வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Chief Minister M.K. Stalin is scheduled to conduct a face-to-face study today.
Work has been expedited in the Chennai Corporation areas, including repairing and repairing storm water drains and checking the mouth lids. In that regard, the Chief Minister M.K. Stalin is scheduled to visit and inspect today. It is noteworthy that he had already personally inspected the repair work of rainwater drains in places including Velachery and Pallikaranai.
Tags:
News