
உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டுகிறார்கள் என போரூரில் சீமான் தெரிவித்தார்.
இலங்கை தமிழர் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து இறந்து போன திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் போரூரில் உள்ள அலுவலகத்தில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மலர்தூவி மலர் வணக்கம் செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

அதானி துறைமுகத்தில் 21,000 கோடி ஹெராயின் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எத்தனை கப்பல்களில் சென்று உள்ளது என்ற கேள்வி உள்ளது. இதில், கணவன், மனைவி மட்டும் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டிருப்பது வேடிக்கையானது
போதைப்பொருள் உள்ளே வந்தால் நாடு மயக்கத்திலே தான் இருக்கும். தனியார் மாயத்தால் வரும் விளைவு இதுதான். மேட் இன் தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பதுதான் நமது கனவு. நாங்கள் அதை பேசும்போது சாத்தியமில்லை என்று பேசினார்கள்.

மேக்கிங் இந்தியாவாக இருக்கும்போது மேட் இன் தமிழ்நாடு என்று எப்படி கொண்டு வருவீர்கள் என்னை மையப்படுத்தி தான் இனி அரசியல் சுத்தும். திமுக, உள்ளாட்சித் தேர்தலில் ஆட்களை கடத்துகிறார்கள் பெண் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள்
அவர்களால் நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம். தேர்தலில் விலகி இருந்தால் பணமும், அரசு வேலையும், ஒப்பந்தமும் தருகிறோம் என்று கூறுகிறார்கள். என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News