
சேலத்தில் சிறுநீரகம் பாதித்த சிறுமியுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொலைபேசியில் பேசியதோடு சிறுமியின் தாயாரிடம் பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார்.
சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி, தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு கிட்னி பெய்லியர் ஆகிவிட்டதாக சொன்னார்கள். என்னுடைய அம்மா எனக்கு கொடுத்த கிட்னியை எனக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக மாற்றினார்கள். அந்த கிட்னியும் எனக்கு வேலை செய்யல.

என்னால் எந்த வேலையும் செய்ய முடியல. எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக டயாலிஸிஸ் செய்து கொண்டிருக்கிறேன் வலி தாங்க முடியல. ப்ளீஸ் சிஎம் என்னைய எப்படியாவது காப்பாத்த முடியுமா. ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் எல்லாரும் என்னைய செத்துருவேன்னு சொல்றாங்க என்று அதில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியுடனும் அவரது தாயுடனும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் சிறுமியின் தாயுடன் பேசும்போது... சுகாதாரத் துறையில் குழந்தையின் பாதிப்பு குறித்து பேசி உள்ளதாகவும், காத்திருப்பில் உள்ளதால் வந்தவுடன் முதல் உரிமை கொடுக்க சொல்லி உள்ளதாகவும் பயப்பட வேண்டாம் காப்பாற்றிவிடலாம் என்று உருக்கமாக பேசியிருந்தார்.

சிறுமியிடம் பேசும்போது பயப்பட வேண்டாம் தைரியமாக இருக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். விரைவில் உதவி கிடைத்துவிடும், தைரியமாக இருக்க வேண்டும் என்று என்றும் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News