18 மாத குழந்தை உயிரிழந்த சோகம்-Tragedy at the death of an 18-month-old baby

சென்னை மண்ணடியில் 3-வது மாடி பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த 18 மாத பெண் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை மண்ணடி இப்ராகிம் சாகிப் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வகணி. இவர் பர்மா பஜாரில் கடை வைத்துள்ளார். இவரது மனைவி யாஸ்மின். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூன்றாவது குழந்தை ஆசியா பெயர். பிறந்து 18 மாதமேயாகும் பச்சிளங் குழந்தையான ஆசியா, நேற்று இரவு மூன்றாவது மாடி பால்கனியில் விளையாடி கொண்டிருந்திருக்கிறாள். அப்போது பால்கனி கம்பியில் ஏறி நின்று விளையாட முயற்சித்துள்ளார் குழந்தை ஆசியா. எதிர்பாராவிதமாக அந்த நேரத்தில் 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததால், குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் ஆசியாவை மீட்டு சிகிச்சைக்காக மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஆசியா இறந்துவிட்டார்.

image


தகவல் அறிந்து வடக்கு கடற்கரை போலீசார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை தவறி விழுந்த இடத்திற்கு சென்று காவல்துறை விசாரணை நடத்தினர். சென்னையில் மாடியில் இருந்து குழந்தை விழுந்து இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

An 18-month-old girl who was playing on the 3rd floor balcony in Chennai has fallen and died, leaving many in mourning.

Chennai Mannadi Ibrahim Sahib is a wealthy man from 2nd Street. He owns a shop in Burma Bazaar. His wife Yasmin. They have 3 daughters. Their third child is named Asia. Asia, an 18-month-old green baby, was playing on the third-floor balcony last night. Baby Asia is trying to play on the balcony wire. Unexpectedly at that time the child suffered a serious head injury as he slipped and fell from the 3rd floor.

The family has been admitted to a private hospital in Mandalay for recovery treatment in Asia. But Asia died last night without the benefit of treatment.

Upon learning of the information, North Coast Police sent the baby's body to Stanley State Hospital for autopsy. Police went to the scene where the child fell and conducted an investigation. It is a great tragedy that a series of incidents of a child falling from a terrace and dying in Chennai has become a thing of the past.

Post a Comment

Previous Post Next Post