புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளராக பணிபுரியும் முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய 16 மணி நேர சோதனையில் 83 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீடு மற்றும் சகோதரர்கள் ரவிச்சந்திரன், பழனிவேல் ஆகியோருக்குச் சொந்தமான 6 இடங்களில் 16 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. முருகானந்தம் வீட்டில் நடந்த சோதனையில், 83 சவரன் நகை, மூன்றே முக்கால் கிலோ வெள்ளி, 46 ஆயிரத்து 100 ரூபாய் ரொக்கம் மற்றும் 40 லட்சம் ரூபாய் மதிப்பிற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போன்று, முருகானந்தம் சகோதரர் பழனிவேல் வீட்டில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார், ஒரு பிஎம்டபிள்யூ கார், தலா 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று இனோவா கார், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு இரு சக்கர வாகனம் மற்றும் 30 சவரன் நகை ஆகியவை லஞ்ச ஒழிப்புத்துறையின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
In Pudukkottai, 83 shaving jewels were seized during a 16-hour search conducted by the Anti-Corruption Department at the premises owned by Muruganantham, who works as an assistant in the Rural Development Department.
More than 16 hours of raids by anti-bribery officers have been completed on 6 places owned by Muruganantham's house and brothers Ravichandran and Palanivel in Charles, Pudukkottai. During a search of Muruganantham's house, authorities seized 83 pieces of shaving jewelery, three-quarters of a kilo of silver, 46,100 rupees in cash and documents worth 40 lakh rupees.
Similarly, a Benz car worth Rs 70 lakh, a BMW car, three Innova cars worth Rs 35 lakh each, two two-wheelers worth Rs 2 lakh and 30 pieces of jewelery were found in the house of Muruganantham's brother Palanivel, officials said.
Tags:
News