
மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் தமன்னா.‘ஜெயிலர்’ படத்தில் அவர் நடித்த ‘காவாலா’ பாடல் சூப்பர் ஹிட்டானது.இப்போது இந்தி வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வரும் அவர், தென்னிந்திய படங்களில் இருந்து விலகி இருப்பது ஏன் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
தென்னிந்திய சினிமாவில், சில ஃபார்முலாக்கள் இருக்கின்றன. அவை எளிதானவை. சில கமர்சியல் படங்களில், எனது கதாபாத்திரங்களுடன் என்னால் பொருந்த முடியவில்லை. இயக்குநர்களிடம் அதைக் குறைக்கும்படி கேட்டிருக்கிறேன். சகிக்க முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தைக் கொண்டாடும் படங்களில் நடிக்காமல் இருக்க முயற்சி செய்யத் தொடங்கினேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Cinema