
கவுன்சில் பிளஃப்ஸ்: அமெரிக்க பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்‌ஷயா சென் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் கவுன்சில் பிளஃப்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், பின்லாந்தின் கல்லே கோல் ஜோனெனை எதிர்த்து விளையாடினார். இதில் லக்‌ஷயா சென் 21-8, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான சங்கர் முத்துசாமி 21-11, 21-16 என்ற நேர் செட்டில் 32-ம் நிலை வீரரான அயர்லாந்தின் நிகத் குயனை வீழ்த்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games