
ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்எஸ் பிரனோய் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்எஸ் பிரனோய், 12-ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டாநிஷிமோட்டோவை எதிர்கொண்டார். 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனோய் 21-16, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் பிரனோய், ஹாங் காங் வீரர் லாங் அங்கஸுடன் மோதுகிறார்.
June 14, 2023 at 09:01AM
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games