chatbot வகையிலான chatGPT-ஐ எப்படி பயன்படுத்தலாம்?

 chatbot type chatGPT

இன்றைய நவீன உலகில் இணைய பயன்பாடு இல்லாத ஆட்களே இருக்க முடியாது என்ற அளவுக்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அதுவும் கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாதவர்களை கைவிட்டுதான் எண்ண வேண்டும். அதேபோல, வேறுபல browserகளை பயன்படுத்தினாலும் கூகுளை தேடாதவர்கள் குறைவுதான். இப்படியாக அன்றாட வாழ்வில் கூகுள் பல வழிகளில் பயனர்களுக்கு உபயோகமாக இருந்து வருகிறது.

ஆனால் அந்த கூகுளுக்கு மாற்றாக ஒரு புதிய artificial intelligence கொண்ட Chatbot வகையான ஒரு தேடுபோறியாக பொது சோதனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவம் கொண்ட ஆராய்ச்சி நிறுவனம்.

அதன்படி கடந்த டிசம்பர் 1ம் தேதி ChatGPT என்ற உரையாடல் வழியிலான chatbot-ஐ தொடங்கியிருப்பதாக OpenAI நிறுவனத்தின் CEO சாம் அல்ட்மென் ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்த ChatGPT-ல் text typing அல்லது voice மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான தரவுகளை நொடிப்பொழுதில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், coding போன்ற பணியில் இருப்போருக்கு இந்த சாட்GPT பெரிதும் உதவிக்கரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து சோதனை முறையில் chatGPT தொடங்கிய ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் signup செய்து பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். AI சப்போர்ட் கொண்ட இந்த புதிய அமைப்பை சோதித்து பார்த்த பயனர்கள் பலரும் தங்களது அனுபவங்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

image

அதில், “chatGPT-இன் வேகத்தை பார்க்கும் போது இனி கூகுளின் தேவை இருக்காது போல. நம்பவே முடியாத அளவுக்கு இந்த AI சிஸ்டம் சிறப்பாகவே இருக்கிறது” என்றும், “chatGPT-இன் இந்த AI தரவுகள் அனைத்தும் கணக்கச்சிதமாக துல்லியமாக இருக்கிறது. இதன் மூலம் தொழில் முனைவோர்கள் எந்த அளவுக்கு தங்களது வேலையை மார்க்கெட்டிங் செய்யலாம் என்பதை சுலபமாக தெரிந்துகொள்ள முடியும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மேலும் இந்த சாட்GPT அடைந்த வளர்ச்சியை பற்றியும் நெட்டிசன்கள் சிலாகித்திருக்கிறார்கள். அதன்படி ஒரு மில்லியன் (10 லட்சம்) பயனர்களை பெற நெட்ஃப்ளிக்ஸுக்கு மூன்றரை ஆண்டுகளும், ஃபேஸ்புக்கிற்கு 10 மாதங்களும், spotifyக்கு 5 மாதங்களும், இன்ஸ்டாகிராமுக்கு இரண்டரை மாதங்கள் ஆனது. ஆனால் இந்த ChatGPT தொடங்கிய ஐந்தே நாட்களில் சர்வ சாதாரணமாக பயனர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்கள்.

கூகுள் போன்ற தேடுபொறிகளை காட்டிலும் இந்த AI அமைப்பு உடனுக்குடனே பயனர்கள் கேட்கும் தரவுகளை கொடுத்தாலும் சமயங்களில் அவற்றில் சில குறைபாடுகள் இருக்கவேச் செய்கின்றன என்றும் chatGPT-ல் சாஃப்ட்வேரை எழுதும் வசதி இருந்தாலும் அது மால்வேரையே உருவாக்கும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இதுபோக, chatGPT-ல் கிடைக்கும் பதிலை அப்படியே காப்பி அடிப்பதால் படிக்கும் அறிவு மட்டுப்படுத்தப்படும் என்ற அபாயம் ஏற்படுவதாகவும் சிலர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்தால் chatGPT இடமிருந்து பதில் வருவதில்லையாம்.

கூகுள் assistant, அமேசானின் alexa, ChatGPT ஆகிய மூன்றும் சில முக்கிய வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் பயனர்கள் கேட்கும் தரவுகளை கொடுக்கக் கூடிய அம்சமாகவே உள்ளதாம். கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அலெக்சா பற்றி கேட்டபோது, “மனிதர்களை போல பதிலளிக்கும் வகையிலேயே இந்த chatbot உருவாக்கப் பட்டிருக்கிறது. virtual assistant உடன் இயற்கையான உரையாடல்களை அனுமதிப்பதே இதன் வேலை. ஆனால் அமேசானின் அலெக்ஸா அப்படி இல்லை. நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அதற்கு மட்டும்தான் பதிலளிக்கும்” என chatGPT தெளிவுபடுத்தியிருக்கிறது.

chatbot type chatGPT

chatbot வகையிலான chatGPT-ஐ எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

OpenAI வெப்சைட்டில் Try it Now என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் ChatGPT பேனர் வரும். அதில் Signup அல்லது OpenAI கணக்கை தொடங்க வேண்டும். அதில் நீங்கள் coders அல்லது தனிப்பட்ட முறையில் Chatbot-ஐ பயன்படுத்தப் போகிறீர்களா என்ற தகவல்களை கொடுத்து மொபைல் எண்ணையும் கொடுத்து OTPஐ பதிவிட்டு கணக்கை தொடங்கிக்கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post