அஜித்தின் துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடலான சில்லா சில்லா இன்று வெளியிடப்படும்-ட்விட்டர்

 Ajith's Thunivu film,

அஜித்தின் துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடலான சில்லா சில்லா இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இதுபோக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #ChillaChilla என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இதுபோக படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரானின் 50வது படமாக துணிவு இருப்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் பதிவிடப்பட்டு வருகிறது. இந்த சில்லா சில்லா பாடலை வைசாக் எழுத அனிருத் பாடியிருக்கிறார். இன்று மாலை 5 மணியளவில் பாடல் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு நேரம் அறிவிக்கப்படவில்லை.

Ajith's Thunivu film,

இப்படி இருக்கையில், துணிவு படம் குறித்தும் அஜித்தின் நடிப்பு குறித்தும் இயக்குநர் ஹெச்.வினோத் பேசியுள்ளதாக வெளியான ட்வீட்டும் வைரலாகி வருகிறது. அதில், “துணிவு படம் எந்த சமூக பிரச்னை பற்றிய கதையும் இல்லை. இது பக்க சுவாரஸ்யமான கமெர்ஷியல் படம்தான். முழுக்க முழுக்க குடும்பமாக பார்க்கக் கூடிய ஒன்றே.

நடிப்புலயும் சரி, வசனம் பேசுவதிலும் சரி துணிவு படத்துல வேற மாதிரியான அஜித்தை நீங்கள் பார்க்கலாம். சண்டை காட்சிகளில் கூட அஜித் டூப் போடவில்லை.” என ஹெச்.வினோத் கூறியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனால் துணிவு படத்தின் மீதான ரசிகர்கள் ஆவல் இன்னும் கூடியே இருக்கிறது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என கூறப்பட்டாலும் தேதி இன்னும் உறுதி செய்யப்படாமலே இருக்கும் நிலையில் துணிவு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது என்ற தகவலும் உலா வருகிறது.

Post a Comment

Previous Post Next Post