மாண்டஸ் புயல்-கொட்டும் மழையில் தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றினர்.

Mandus storm

அம்பத்தூரில் மாண்டஸ் புயலால் அடித்த சூறாவளி காற்றில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்ததால் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது. 1 மணி நேரம் போராடி புயல் காற்றில் கொட்டும் மழையில் தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றினர்.

மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கிய நிலையில், அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆம்பிட் ஐடி பார்க் பகுதியில் பிரதான சாலையின் குறுக்கே ராட்சத மரம் ஒன்று அடியோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இது குறித்து தகவல் அறிந்த அங்கு விரைந்த அம்பத்தூர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். கொட்டும் மழை, வீசிய காற்றை பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 1 மணிநேரம் போராடி ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சாலையில் சாய்ந்த மரத்தை அகற்றினர்.

Mandus storm

இந்நிலையில், மரம் விழுந்ததால் மின்சார வயர்கள் அறுந்து போனது. புயல் காரணமக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதே போல் அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாயிலில் இருந்த பாதம் மரம் ஒன்று காற்றை தாக்கு பிடிக்க முடியாமல் சாய்ந்து இதையும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அகற்றினார்..

அம்பத்தூரில் அடுத்தடுத்து வேருடன் சாய்ந்த இரு மரங்களை புயல் காற்றுடன் கூடிய கனமழையை பொருட்படுத்தாமல் அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அப்புறப்படுத்தியதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.

Post a Comment

Previous Post Next Post