சிவப்பு அரிசி தமிழகத்தின் பாரம்பரிய நெல் -சிவப்பு அரிசியின் பயன்கள்

Benefits of Red Rice

என்னது சிகப்பு அரிசி-ல இவ்வளவு நன்மைகளா ..?

சராசரியான அரிசியின் விலை 1 கிலோ ரூ.40 ஆனால் சிகப்பு அரிசியின் விலை 1/2 கிலோ ரூ. 40 இவ்வளவு பணம் கொடுத்து வாங்குகிற அளவுக்கு சிகப்பு அரிசிக்கான மதிப்புகள் இருக்க..?

Benefits of Red Rice

சிகப்பு அரிசி வரலாறு :

சிவப்புக் கவுணி அதாவது சிவப்பு அரிசி தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று . சோழர் காலம் முதல் இன்றுவரை மக்கள் பயன்பாட்டில் இருந்துவரும் ஒன்று . வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்க்கைப் பேரிடர்களை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது . குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் ஈட்டக்கூடிய நெல் . இதில் அதிக அளவு ஆண்டி-ஆஸிடண்ட் உள்ளதால் மற்ற அரிசிகளை விட சிறந்தது.

Benefits of Red Rice

சிகப்புக் அரிசியின் பயன்கள்:

1. அக்காலத்தில் சிவப்பு அரிசியை உட்கொண்டவர்களுக்கு இதய நோய், நீரிழவு நோய் போன்ற நோய்கள் குறைவாக காணப்பட்டதாக கூறப்படுகிறது

2. நோயெதிர்ப்பு சக்திக்கு காரணமாக உள்ள ‘அந்தோசயனின்’ என்னும் மூலக்கூறு சிவப்பு அரிசிக்கு சிகப்பு நிறத்தை அளிக்கிறது

3. பொதுவாக சர்க்கைரை நோய் உள்ளவர்கள் சிவப்பு அரிசியை உட்கொண்டால் சர்கரையின் அளவு கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் .

4. உடல் எடையை குறைக்க விரும்புவோர்களுக்கு உகந்த ஒன்று . இதில், இருக்கும் புரதம், நார்சத்து உடலில் உள்ள கொழுப்புகளை கரைய செய்து உடல் எடையயை குறைக்க உதவுகிறது

5. சிகப்பு அரிசி புற்று நோய்க்கு எதிராகவும், புற்று நோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடக் கூடிய தன்மையுடையது

Benefits of Red Rice

புட்டு, கொழுக்கட்டை, அடை , தோசை , சிகப்பு அரிசி கொழுக்கட்டை பாயாசம் .., போன்ற இனிப்பு வகை உணவாக குழந்தைகளுக்கு அன்றாட வாழ்வில் கொடுக்கலாம்.

Post a Comment

Previous Post Next Post