2022-ம் ஆண்டில் மிகப் பிரபலமான இந்திய சினிமா நட்சத்திரங்களின் ஐ.எம்.டி.பி. பட்டியல்

 BEST INDIAN MOVIES OF 2022

2022-ம் ஆண்டில் மிகப் பிரபலமான இந்திய சினிமா நட்சத்திரங்களின் ஐ.எம்.டி.பி. பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகை ஆலியா பட் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

மிகப் பிரபலமான இந்திய சினிமா நட்சத்திரங்களின் ஐ.எம்.டி.பி. பட்டியலில் தனுஷ், ஆலியா பட்-ஐத் தொடர்ந்து 3-வது இடத்தில் ஐஸ்வர்யா ராயும், 4-ம் இடத்தில் ராம் சரண், 5-வத இடத்தில் சமந்தா ரூத் பிரபு, 6-வத இடத்தில் ஹிருத்திக் ரோஷன், 7-வது இடத்தில் கியாரா அத்வானி, 8-வது ஜூனியர் என்.டி. ஆர், 9-வது இடத்தில் அல்லு அர்ஜூன், 10-வது இடத்தில் யாஷ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் இடம் பிடித்த பெரும்பாலான நட்சத்திரங்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், பிரபாஸ், மகேஷ் பாபு, மோகன் லால், மம்முட்டி, துல்கர் சல்மான் போன்ற நடிகர்கள் இடம்பெறவில்லை.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், இந்த வருடத் துவக்கத்தில், கார்த்திக் நரேனின் இயக்கத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான ‘மாறன்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பெரிதாக ரசிகர்களை கவராத நிலையில், அடுத்ததாக நெட்ஃபிளிக்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில், ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்ததன் மூலம், மிகப் பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இந்தப் படமும் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றாலும், தனுஷின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்திருந்தார் தனுஷ். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் மாஸ் காட்டியது. இதனையடுத்து, ‘நானே வருவேன்’ படத்தில் நடித்திருந்த தனுஷ், அடுத்ததாக தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.

Post a Comment

Previous Post Next Post