சுழலில் சிக்கிய சட்டக்கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு

ஊத்தங்கரை அருகே ஆற்றில் குளித்த சட்டக்கல்லூரி மாணவர் சடலமாக மீட்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி.இவருடைய மகன் தீர்த்தகிரி (24) தர்மபுரி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

image

இந்நிலையில், நேற்று இவர் கொண்டம்பட்டி அருகே பாம்பாற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது சுழலில் சிக்கி அடித்து செல்லப்பட்ட அவரை, ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் நேற்று முதல் தேடி வந்தனர்.

இதையடுத்து இன்று காலை பாவக்கல் அருகே தீர்த்தகிரி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த கிராம பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Post a Comment

Previous Post Next Post