உடனே சிகிச்சை கொடுங்க’-நளினியின் தாயார் மனு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முருகன் வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதால், அவருக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முருகனின் மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா தாக்கல் செய்துள்ள மனுவில், சிறையில் உள்ள முருகனை அவரது வழக்கறிஞர்கள் அண்மையில் சந்தித்த போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 32 நாட்களாக அவர் உண்ணாவிரதம் இருப்பதால், உடல் எடை குறைந்து பேச முடியாது நிலையில் அவர் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

image

முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரி வேலூர் சிறைத்துறையிடம் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார் அவர். எனவே முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க தமிழக அரசு, சிறைத்துறை டி.ஜி.பி., ஐ,ஜி., மற்றும் வேலூர் சிறைத்துறை எஸ்.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post