கிக் படத்திற்காக முதன்முறையாக சொந்தக் குரலில் பாடினார் நடிகர் சந்தானம்.
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினி திவேதி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில் "சாட்டர்டே இஸ் கம்மிங்கு..." (Saturday is cominguu) என்று ஆரம்பிக்கும் பாடலை முதல் முறையாக நடிகர் சந்தானம் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். இப்பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலின் முழு வரிகளுக்கான வீடியோ அக்டோபர் 10ஆம் தேதி மாலை 06.03 மணிக்கு வெளியாகவுள்ளது.
கிக் திரைப்படம், நகைச்சுவையான பொழுது போக்கு படமென சொல்லப்படுகிறது. பல ஹிட் படங்களை கன்னடத்தில் கொடுத்து, இப்படம் மூலம் தமிழுக்கும் வந்திருக்கிறார் பிரசாந்த் ராஜ். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிற சந்தானம் குறுக்கு வழியில் கூட போய் வெற்றியை அடைய துடிக்கிறவர் என்பதே படத்தின் ஒன்லைன் என்று சொல்லப்படுகிறது.
Thanks:
https://www.puthiyathalaimurai.com/

