ISL Season 9: Chennaiyin FC start the series with a win

 ஐ.எஸ்.எல் சீசன் 9: வெற்றியுடன் தொடரை துவங்கியது சென்னையின் FC அணி

ISL-Season-9-Chennai-FC-start-the-series-with-a-win

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் லீக் தொடரில் சென்னையின் FC அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடியது.

9வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கடந்த வாரம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது, ஐ.எஸ்.எல் தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக 8வது இடத்தில் இருந்த சென்னையின் FC அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு புதிய பயிற்சியாளர் புதிய வீரர்கள் என பல்வேறு மாற்றங்களை செய்துள்ளனர்.

image

இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் லீக் தொடரில் சென்னையின் FC அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடியது. முதல் பாதியின் துவக்கம் முதல் அதீக்கம் செலுத்திய கொல்கத்தா அணி போட்டியின் 27வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் மன்வீர் சிங் முதல் கோலை அடித்தார், போட்டியின் இரண்டாம் பாதி துவங்கியது முதல் சென்னையின் FC அணி ஆதிக்கம் செலுத்த SUBSTITUTE வீரராக களமிறங்கிய கரிகாரி களமிறங்கிய நான்காவது நிமிடத்தில் (போட்டியின் 62வது நிமிடத்தில்) பெனால்டி மூலம் கோல் அடித்தார் தொடர்ந்து சிறப்பாக விளையாடி சென்னை அணி போட்டியின் 82வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Thanks:

puthiyathalaimurai.

Post a Comment

Previous Post Next Post