
பைக்கை ஓட்டியவாறே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு நபர் ஒற்றைக்காலில் காரை தள்ளிச்சென்ற் விநோத சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது.
அரியலூர் புறவழிச்சாலையில் மாருதி 800 காரை பின்னால் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பைக்கில் சென்றவர் தன்னுடைய ஒன்றை காலை வைத்து காரை தள்ளிக்கொண்டு 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று மெக்கானிக் ஷாப்பில் விட்டுள்ளார்.

இதுகுறித்து கேட்டபோது, மாருதி 800 கார் பழுது ஏற்பட்டதால் அதை டோல் செய்து இழுத்து செல்வதற்கு 2000 ரூபாய் செலவாகும் என்பதால், நண்பர் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் இயக்கிக்கொண்டு காலால் உந்தித்தள்ளியே காரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்க்கு தள்ளி சென்றோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News