டி20 உலகக்கோப்பையை விட பும்ராவின் கிரிக்கெட் கரியர் மிக முக்கியம்

 Bumrah's cricket career is more important than T20 World Cup

Jasprit-Bumrah-Career-More-Important-Than-This-T20-World-Cup-Rohit-Sharma

'உலகக்கோப்பையை விட பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை தான் முக்கியம்' என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று முதல் நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய அணி  பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் முதல் உலகக் கோப்பை ஆட்டமாக அக்டோபர் 23 அன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதற்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றிருந்தார். ஆனால்,  முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட, உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார். பும்ராவுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தேர்வானார்.

image

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக கேப்டன்கள் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, ''பும்ராவின் காயம் குறித்து நிறைய மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்தோம். ஆனால் யாரும் திருப்திகரமான பதிலை கொடுக்கவில்லை. இந்த உலகக்கோப்பை போட்டி முக்கியமானது தான். 

ஆனால் அதை விட அவரது கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது. அவருக்கு தற்போது 27-28 வயது தான் ஆகிறது. அவர் இன்னும் நிறைய கிரிக்கெட்டில் விளையாட வேண்டி உள்ளது. காயத்துடன் அவரை உலக கோப்பை போட்டியில் விளையாட வைப்பது மிகவும் 'ரிஸ்க்' ஆகும். நாங்கள் பேசிய அனைத்து டாக்டர்களும் இதையே சொன்னார்கள்.

image

இன்னும் நிறைய கிரிக்கெட் வாழ்க்கை அவருக்கு எஞ்சி இருக்கிறது. இந்திய அணிக்காக மேலும் பல போட்டிகளில் விளையாடி வெற்றி தேடித்தருவார். ஆனால் அவர் அணியில் இல்லாதது இழப்பு தான். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்பட்டு உள்ளார். ஷமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2-3 வாரங்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்தார். 

அதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைக்கப்பட்ட அவர் 10 நாட்களாக கடுமையாக உழைத்து முழு உடல்தகுதியை எட்டி இருக்கிறார். 3-4 பயிற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார். எல்லாமே அவருக்கு சரியாக சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் இன்று பிரிஸ்பேனில் பயிற்சி மேற்கொள்ள உள்ளோம், ஷமியும் அணியினருடன் இணைந்து பயிற்சி செய்வார்'' என்றார்.

Post a Comment

Previous Post Next Post