டி20 உலகக் கோப்பையில் அந்த இருவர் இல்லாதது இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு – ரவி சாஸ்திரி -The absence of those two in the T20 World Cup is a good opportunity for the young players

 டி20 உலகக் கோப்பையில் அந்த இருவர் இல்லாதது இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு – ரவி சாஸ்திரி



டி-20 உலகக் கோப்பை தொடரில் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் இடம்பெறாதது வருத்தம் அளித்தாலும் இளம் வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி தெரிவித்தார்.

சென்னை போருர் அருகே கௌப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அலுவலர் காசி விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தார்.

 


அப்போது அங்கிருந்த வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த ரவிசாஸ்திரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது... இந்திய அணி தற்போது பலம் வாய்ந்த அணியாக உள்ளது. வரும் டி-20 உலகக் கோப்பை தொடரில் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறாதது வருத்தம் அளித்தாலும் இளம் வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். கட்டாயம் வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி எளிமையாக செமிபைனல் சென்று கோப்பையையும் வெல்லும் என்றார்.

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் ஆறாவது இடத்தில் களமிறங்குவார். கடந்த காலங்களை விட தற்போது பீல்டிங்கில் நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளது. கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள ஆர்வம் காட்டும் இளம் தலைமுறையினருக்கு சிவப்பு பந்து கிரிக்கெட் மீதுதான் ஆர்வம் காட்ட வேண்டும். ஏனென்றால் டி-20 கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டால் தொலைக் காட்சியிலேயே பார்க்கலாம் அல்லது தெருக்களில் விளையாடும் போது பார்க்கலாம், நேர்த்தியாக விளையாட வேண்டும் என்றால் சிவப்பு பந்து கிரிக்கெட் முறையாக பயின்றால் சிகப்பு மற்றும் வெள்ளை பந்தாட்ட கிரிக்கெட் விளையாட்டு விளையாட கைத்தேர்ந்தவராக வலம் வரலாம்.

 


தற்போது கூட இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் அளவில்லாத திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். சமூக வலைதளத்தில் கிரிக்கெட் வீரர்களை விமர்சனம் செய்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள் தங்களுக்கு என்ன தோன்றுகின்றதோ என்ன நினைக்கின்றீர்களோ அதை செய்யுங்கள் என்றார்.

Post a Comment

Previous Post Next Post