'ஆண்களை போல பெண்களும் ஆடை அணியுங்கள்' ஏன் சொன்னார் பெரியார்?

சமீபகாலங்களில் பெரியார் மீது கடுமையான தாக்குதலும் எதிர்ப்புகளும் அதிகரித்து உள்ளது. அவரது கருத்துக்களுக்கு எதிர்வினையாக அவரது சிலைகள் அவமானப்படுத்தப்படுகிறது. பெரியாரின் கருத்துகளும் அதனை தொடரும் எதிர்க்கருத்துகளுக்கும், பெரியாரின் இருந்த போதும், அவர் மறைந்த பிறகு நிகழ்பவை தான். விவாதங்களில் மூலமாக தான் வேறுபட்டை ஒழிக்க முடியும் என்பதால் பெரியார் சொன்னதாக பரப்பப்படும் கருத்துகளில் சிலவற்றுக்கான முழு பின்னணியும் விளக்கமும் இங்கே..

மார்டன் உடை அணியச் சொன்னாரா பெரியார்?

8 முழ சேலையை இழுத்துக் கட்டிக்கொண்டு, சேலையைச் சரிசெய்வதிலேயே கவனம் செலுத்திக்கொண்டு இருக்காமல் ஆண்கள் போல் உடை அணியச் சொன்னார். ஆண்களின் உடை கண்ணியமாகவும், செளவுகரியமாகவும் இருப்பதால் ஆண்கள் உடை குறித்த சிந்தனையின்றி மற்ற ஆக்கப்பூர்வமான வேலைகள் குறித்து சிந்திக்கிறார்கள். அதனால் பெண்களும் ஆண்களைப் போலவே உடையை அணிய வேண்டும் என்றார். இதுதான், பின்னாளில் பெண்களின் ஆடை சீர்கேடுக்கு பெரியார் தான் காரணம் என்று திரிக்கப்பட்டது.  

மணியம்மையை ஏன் திருமணம் செய்தார்?

அப்போது பெரியாருக்கு வயது 71. மணியம்மைக்கு 32 வயது. அண்ணா தேர்தல் அரசியலில் ஈடுப்பட சிந்தித்துக்கொண்டிருந்தார் அதனால் அண்ணா உட்பட மற்ற திக தலைவர்களையும் தனது வாரிசாக அறிவிக்கமுடியாத சூழல் இருந்த சமயம், மணியம்மையை வாரிசாகத் தேர்வு செய்தார். ஆனால் ”ஒரு பெண்னை மகளாக தத்தெடுக்க முடியாது. வாரிசாக வேண்டுமென்றால் திருமணம் மட்டுமே செய்ய முடியும்” என்றது இந்து சட்டம். இந்த இந்து சட்டத்தை எதிர்த்து ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்து வந்த பெரியாருக்கு, இந்த இந்து சட்டத்தை ஏற்றால் மட்டுமே தனக்கு ஒரு வாரிசைத் தேர்வு செய்ய முடியும் என்ற நிர்ப்பந்தம் தொடர்ந்ததால், மணியம்மையை இணை ஏற்பு செய்தார்.

image    

image

தமிழர்கள் காட்டுமிராண்டியா?

அடிமைப்பட்டு கிடைப்பது காட்டுமிராண்டித் தனம் என்று பலசமயங்களில் பெரியார் கூறியிருக்கிறார்.

1943-ல் பெரியார் எழுதிய கட்டுரையில் அவர் கூறியது , ‘’ தமிழர்கள் அனைவரும் திராவிடத்தின் ஆதி மக்களே..ஆனால், தமிழர்கள் இன்று தன்னுடைய கலாச்சாரப் பழக்கவழக்கங்களை மறந்துவிட்டார்கள். அதைச் சனாதனம் மறைத்துவிட்டது. தை பொங்கல் திருநாளைத் தவிர மற்ற பண்டிகைகள் எதுவும் தமிழர்களின் கலாச்சார பண்டிகைகள் கிடையாது. இன்று தமிழர்கள் பின்பற்றும் எதுவும் தமிழர்களின் கலாச்சாரம் கிடையாது. எனவே அனைத்தும் தமிழர்களை அடிமைப்படுத்தும் இந்த அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றினால் தமிழர்கள் காட்டுமிராண்டி போல் ஆகிவிடுவார்கள். அதனால் சாதியத்தை வளர்க்கு இந்த கலாச்சாரத்திலிருந்து வெளிவாருங்கள். 

பெரும்பான்மையானவர்களின் மதத்தை மட்டும் எதிர்த்தாரா பெரியார் ?

இந்து மதத்தை மற்றும் அல்ல எல்லா மதத்தையும் எதிர்த்தார் பெரியார். மனிதர்களுக்கு மதம் தேவையில்லாதது. மதம் மனிதர்களை மூடநம்பிக்கையின் பெயரால் அடிமைப்படுத்தும் என்றார் பெரியார். பெரும்பான்மையினர் பின்பற்றும் இந்து மதத்தில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்ததால் அதை அதிகமாக எதிர்த்தார். ஒரு குறிப்பிடப் பிரிவினருக்கு மட்டுமே வேதம் படைத்தது அவர்களை மட்டுமே படிக்க அனுமதித்த கடவுள் எப்படி எல்லோருக்குமான கடவுளாக இருக்க முடியும்? வேதங்களிலிருந்து தானே சாதிகள் வருகிறது. சாதிகளிலிருந்து தானே ஏற்ற தாழ்வுகள் வந்தது, அதனால் மதம் வேண்டாம் என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post