வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம் - உள்ளே சென்று பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

மனைவி இறந்த சோகத்தில் தான் வளர்த்த நாயோடு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்ன சாயகார தெருவில் பட்டு சேலை வியாபாரம் செய்யும் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் முதல் மாடியில் கடந்த இரண்டு வருங்களாக ராஜ் (50) என்பவர் வாடகைக்கு குடியிருந்து துணி தைக்கும் டைலராக பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.

image

இந்நிலையில் ராஜ், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக தான் வசித்து வந்த அறையின் சுவற்றில் சென்னையிலுள்ள தன்னுடைய மனைவி இறந்து விட்டதாகவும் இனிமேல் நான் வாழ்வதற்கு விருப்பம் இல்லை என ஆங்கிலத்தில் எழுதி விட்டு ஆசையாக வளர்த்து நாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

ராஜ் தூக்கிட்டுக் கொண்ட நான்கு நாட்களுக்கு மேல் ஆன நிலையில், உடல் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் பாஸ்கார் வாடகை பணத்தை வாங்குவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மேல் மாடியில் குடியிருக்கும் ராஜ் தங்கி இருந்த அறையில் துர்நாற்றம் அதிகமாக வீசவே, சந்தேகமடைந்த பாஸ்கார் போலீசாருக்கு தகவலை கொடுத்துள்ளார்.

image

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாடியிலுள்ள வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது ராஜ் நாயுடன் தூக்கிட்டவாறு அழுகிய நிலையில், இருந்துள்ளனர். இதையடுத்து ராஜ் மற்றும் நாய் உடலை மீட்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post