ஆ.ராசா சர்ச்சை பேச்சு: நீலகிரியில் இந்து அமைப்புகள் சார்பாக கடையடைப்பு போராட்டம்-Shutdown by Hindu Organizations in Nilgiris

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா இந்து மாதம் குறித்து அவதூறு பேசியதாக குற்றம் சாட்டி இன்று நீலகிரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பாக கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒருசில இடங்களில், ஆட்டோக்கள், மினி பஸ்கள், டூரிஸ்ட் வாகனங்கள் இயங்கின, இறைச்சி, பூ மற்றும் பழக்கடைகள் பெரும்பாலும் திறந்திருக்கின்றன.

image

திமுக நிர்வாகிகள் வியாபாரிகளை நேரில் சந்தித்து கடைகளை திறக்கச் சொல்லி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஒருசில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலீசாரும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post