
ஆவின் இனிப்பு வகைகளின் விலை ரூ.20 முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக, பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், பன்னீர் உள்ளிட்ட 200 வகையான பால் பொருட்கள் விற்கப்படுகின்றன. இவை, ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி, தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை மொத்த விற்பனை கடைகளிலும் விற்கப்படுகின்றன.

இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் இனிப்பு வகைகளின் விலையை ரூ.20 முதல் 80 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
அதன்படி குலோப் ஜாமூன் 125 கிராம் 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், ரசகுல்லா 100 கிராம் 40 ரூபாயில் இருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பால்கோவா 500 கிராம் 210 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், மைசூர் பாக்கு 500 கிராம் 230 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், சர்க்கரையில்லா பால்கோவா 1 கிலோ 520 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக உயத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு 17 வகையான இனிப்பு பதார்த்தங்கனின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News