ஹெல்மெட் போடாத ஜி.பி.முத்துவுடன் 150 கி.மீ வேகத்தில் சாகசப் பயணம் சென்ற TTF வாசன்! TTF Wasan went on an adventure at a speed of 150 kmph

யூடியூபர்கள் ஜிபி முத்து, TTF வாசன் அதிவேகமாக பைக் பயணம் மேற்கொண்ட காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

Twin Throttlers என்ற யூ டியூப் சேனலை நடத்தி வரும் TTF வாசன் பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவது வழக்கம். அதுமட்டுமின்றி, பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டன்ட் செய்வது, ரேஸ் செய்வது போன்றவற்றை இவர் வீடியோவாக போட்டு வருகிறார். சாலை விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இவர் மீது புகார் உள்ளது.

image

இந்நிலையில், யூடியூபர் TTF வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. வாகனங்கள் வரும் எதிர்திசையில் கைகளை விட்டு அதிவேகமாக பைக் ஓட்டி ஜிபி முத்துவுடன் இணைந்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் செல்லும் பைக்கின் வேகம் காண்போரையும் பதைபதைக்க வைக்கிறது.

இந்த ஆபத்தான அதிவேக பயணத்தின் போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜி.பி. முத்து ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாலையில் வரும் மற்றவர்களையும் அச்சுறுத்தும் வகையில் வீயூஸ்களை அதிகரிப்பதற்காக இவ்வாறு அதிவேகப் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post