கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்ட முற்பட்டபோது, யானை வாகனத்தை எதிர்த்து வந்த காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கொளப்பள்ளி, மழவன் சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்னா யானை ஒன்று ஊருக்குள் சுற்றி தெரிகிறது. சமீப காலமாக அந்த யானை மனிதர்களை கண்டால் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுகிறது. அந்த யானையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் ஊருக்குள்ள நுழைந்த மக்னா யனையை வனத்துறையினர் ஜீப்பை கொண்டு விரட்ட முயற்சி செய்துள்ளனர். அப்போது கோபம் அடைந்த அந்த யானை எதிர்த்து ஜிப்பை தாக்க வந்துள்ளது. இருப்பினும் அசராத வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி இருக்கிறார்கள். யானை ஜீப்பை எதிர்த்து வந்த காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News