சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஓரிரு தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், பல்லாவரம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதைப் போல் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆன்லைன் ரம்மிக்கு தடையா? முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News